| BALA-14/04/17
அன்பார்ந்த சேரிவாழ் திராவிட ஆதரவாளர்களே, பெரியாரிய சேரிவாழ் மக்களே, திராவிட சூத்திரர்களே......
பட்டியல் இன மக்களுக்காகத் தேர்தலில் இரட்டை வாக்குரிமையை அளிக்க பிரிட்டிசு அரசு முன் வந்தபோது இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்ட அண்ணல் அம்பேத்கர் அந்தத் திட்டத்தை ஆதரித்தார். ஆனால் காந்தி அதைக் கடுமையாக எதிர்த்தார்.
இந்துக்கள் தீண்டத் தகாதவர்கள் என்றும் சாதி இந்துக்கள் என்றும் பிளவு படுவதைத் தாம் விரும்பவில்லை என்று கூறினார். எரவாடா சிறையில் இருந்த காந்தி அடிகள் 18-9-1932 இல் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார். காந்தியடிகள் உடல் நிலை மோசமானதால் அந்த உண்ணாவிரதத்தை நிறுத்திக் காந்தியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அண்ணல் அம்பேத்கரும் பிற இந்து தலைவர்களும் பூனாவில் கூடிப் பேசினர். இந்தியாவின் மிகச் சிறந்த தலைவராக விளங்கிய காந்தியின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒரு புறம்; பட்டியல் சமூகத்தின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம். எனவே இருதலைக் கொள்ளி நிலைமைக்கு அம்பேத்கர் ஆளானார்.
பூனா ஒப்பந்தத்தின் படி மாகாணச் சட்டசவைகளில் 148 இடங்களைத் பட்டியல் இன மக்களுக்கு அளிப்பது என்று முடிவு ஆனது. பிரிட்டிசு இந்தியாவில் மத்தியச் சட்ட சவையில் இந்துக்களுக்காக உள்ள மொத்த இடங்களில் பத்து விழுக்காட்டைத் பட்டியல் இன மக்களுக்கு ஒதுக்கீடு செய்வது என்றும் தீர்மானித்தார்கள். பட்டியல் இன மக்கள் சார்பாக அண்ணல் அம்பேத்கரும், சாதி இந்துக்களின் சார்பாகப் மதன் மோகன் மாளவியாவும் கையெழுத்து இட்டார்கள்.
இராசகோபாலாச்சாரி இராசேந்திரப் பிரசாது, எம்.சி.இராஜா போன்ற தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். இதனைத் தொடர்ந்து காந்தி உண்ணா நோன்பு போராட்டத்தைக் கைவிட்டார்.
பூனா ஒப்பந்தம் இந்தியா முழுவதும் உணர்ச்சி அலைகளை உண்டாக்கியது. அதன் விளைவு உலகெங்கும் எதிரொலித்தது.
இப்போது சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்காரை பட்டியலின மக்களின் தலைவர் என்று சொல்லியது? பூனா ஒப்பந்தம் சூத்திரர்கள் என்ற பார்பனிய அடியாட்களின் களவாணித்தனம். காந்தி உண்ணாவிரதம் இருந்த போது இந்தியா முழுவதும் பட்டியல் இன மக்களின் மீது வன்முறைகளை நிகழ்த்திய கூட்டங்கள், காந்திய சுட்டு கொன்ன போது ஏன் வன்முறை நிகழ்த்தவில்லை? ஏனென்றால் இவனும் அவனும் உறவுகள்.
அது போகட்டும். இந்த சம்பவம் நடக்கும் போது ரஷ்யாவில் இருந்து ஈ.வெ.ரா தந்தி கொடுத்தாராம் "காந்தி சாகட்டும் நீங்கள் விட்டுக்கொடுக்காதீர்கள்" என்று.... அடடா என்ன ஒரு கரிசனம். நாடெங்கும் பட்டியல் இன மக்களின் மீது வன்முறைகள் நடந்துகொண்டிருக்கிறது, அப்போது காந்திக்கு எதிராக தந்தி கொடுத்தாராம். அட இதுவும் போகட்டும்.
ஈ.வெ.ரா 11-11-1957 இந்திய சாசணத்தை தீயிட்டு எரித்தார்.
ஏன் தெரியுமா?
எஸ்.ஸி மக்களுக்கு தேவையில்லாமல் அண்ணல் அம்பேத்கர் அதிக சதவீத இடஒதுக்கீடுப் பெற்றுவிட்டார் என்பதற்காக...
அத்தோடு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு குடுத்தாலும் அவர்களில்(எஸ்.ஸி) இருந்து மூன்று நான்கு ஆட்கள் கூட வர மாட்டார்கள் என்றாரே ஏன்? அட இதுவும் போகட்டும்.
காந்தியத்தான் சுட்டு கொன்று விட்டார்களே, அதற்க்கு அப்புறம் ஏன் ஈ.வெ.ரா அண்ணல் அம்பேத்காரை சந்தித்து "வாருங்கள் இரட்டை வாக்குரிமையை ஆதரித்து மீண்டும் போராடுவோம்" என்று அழைக்கவில்லை? அட இதுவும் போகட்டும். தமிழ்நாட்டில் அவர் இரட்டை வாக்குரிமைக்கு அவர் செய்தது என்ன?
--------------- 22/04/2017 செத்த மாட்டை உரித்து தின்பதும், உயிரோடுல்ல மாட்டை அறுத்து தின்பதும் ஒன்றா என்ன? செத்த மாட்டை தூக்குவது ஒரு அடிமைத் தொழில், அந்த தோலை விற்று வயிறு பிழைத்தார்கள் என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் என்னமோ பறையர்கள் சோத்துக்கே வழியே இல்லாமல் செத்த மாட்டை சாப்பிட்டது போல் பேசக் கூடாது. எவனாவது அநாவசியமாய் கமெண்ட் கொடுத்தால் யோசிக்காமல் உடனே அழிக்கப்படும். நான் பெரிய இவன்தான். என் செருப்பு மண்ணுக்கு கூட நீங்கள் சமமாக மாட்டீர்கள். என் சமூகத்தை "செத்த மாடு திண்ணி பறை கூட்டம்" என்ற இழி சொல்லோடு அழைத்த சூத்திர பன்றிகள் மீண்டும் அதை நிலைக்கு எடுத்து செல்ல முயல்கிறார்கள். மாட்டை உங்க சூத்திர தெருவில் அறுத்து புரட்சி செய்யுங்கள். சேரிக்குள் வந்து எங்களிடம் உங்கள் புரட்சி மயிரை காட்ட வேண்டாம். ---------------
உனக்கு ஜாதி வேண்டுமா, வர்ணம் வேண்டுமா அதை உன் வீட்டோடு வைத்துக்கொள், அதை கோவில், குலம், கடை, என்று தெருவுக்கு கொண்டு வராதே. தெருவில் நான் ஆண்ட பரம்பரையாக்கும் என்று சொல்லிக்கொண்டு ஜாதியை வளர்க்கதே. இவன் தாழ்த்தப்பட்டவன், தீண்டதகாதவன் என்று சொல்லாதே.
இதுதான் நான் சொல்வது, நான் ஒன்றும், (கவனிக்க "நான்") ஒன்றும் உங்கள் வீட்டினுள் நுழைந்து கூடி கும்மி அடிக்க தீண்டாமை எதிர்ப்போ, ஜாதி ஒழிப்போ பேசவில்லை. என்னை விலக்கி வைக்கும் உன்னோடு எனக்கு என்ன உறவு வேண்டி கிடக்கு? என்னை விலக்கி வைக்கும் நீ என் கால் செருப்புக்கு கூட சமானவன் இல்லை.
எனக்கு சமுதாய அந்தஸ்து வேண்டும், தெருவில் நடக்கும் போது உன்னுடன் சேர்ந்து நானும் நடக்க வேண்டும். கோவிலுக்குள் நீ செல்லும் போது நானும் உன்னுடன் சமமாக நுழைய வேண்டும். பொது குலத்தில் தண்ணீர் எடுக்கும் பொது நானும் எடுக்க வேண்டும். (உன் வீட்டு குலத்தில் வந்து தண்ணீர் எடுத்தல் வெளியே போ என்று சொல்).
உன் தெருவில் நான் குடியேற வேண்டாம், என் தெருவில் நீ குடியேற வேண்டாம். நீ உன் ஜாதி பெயரை சொல்லி பெருமை படுகிறாய் அல்லாவா அதை போல நானும் என் பெயரை சொல்லி பெருமை பட்டுகொள்கிறேன், ஏனென்றால் நான் ஜாதியை விட்டாலும் நீ விடமாட்டாய், உன் மனதில் இருந்து ஜாதியை அழிக்க யாராலும் முடியாது. நீ ஒரு ஜாதி வெறி பிடித்த மிருகம். நீ மிருகமாகவே இரு, மனிதானாய் மாறிவிடாதே, மாறினால் அது மனிதர்களுக்கு கேவலம்.
நீ நீயாக இரு, நான் நானாக இருக்கிறேன். ஆனால் என்னை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லாதே. தீண்டதகாதவன் என்று சொல்லி விளக்கி வைக்காதே, அப்படி சொன்னால் செய்தால் செருப்பால் அடிப்பேன்.
உன் ஜாதியை உன் வீட்டோடு வைத்துகொள் தெருவுக்கு கொண்டு வராதே, என்றுதான் சொல்கிறேன்.
|
”கேட்பதை விடக் கூடுதலாக, அரை லிட்டர் நெல் என்ன? 6 லிட்டர் தருகிறோம்… செங்கொடியை இறக்கி விடுங்கள்” என்றார்கள் பண்ணையார்கள்.
”எங்கள் உயிரை விட மேலானது எங்கள் செங்கொடி. எங்கள் உயிரே போனாலும் இறக்க மாட்டோம்” என முழங்கியதால்தான், 1968 ஆம் ஆண்டு, டிசம்பர்-25 ஆம் தேதி கீழவெண்மணியில் 44 தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்.
கீழவெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம்.
தஞ்சை மாவட்டம் மிகுந்த செழுமையான மாவட்டமாக இருந்தது அங்கு பாசன வசதி மிகுந்து. விளைநிலங்கள் செழுமையாகவும் அதிக விளைச்சலைத் தருபவை ஆக இருந்தன. தமிழ்நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சதவிகித விளைநிலங்கள் தஞ்சை மாவட்டத்தின் கீழ் இருந்தது. தஞ்சையில் பல நிலங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். அங்கு இருந்த நிலக்கிழார்கள் அவர்களை அடிமையாக எண்ணி நடத்திவந்தனர். அங்கு இருந்த பண்ணை ஆட்கள் அராஜக போக்கால் அவர்கள் மிகக் குறைந்த ஊதியம் மிகக் குறைந்த வேளை உணவு வழங்கப் பட்டது. கூலி ஆட்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சம்பளம் அவர்கள் வழக்கை முறை வெகுவாக மன உளைச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் நல்ல வாழ்க்கை முறை அடைய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் அடிமை நிலையும் குறைந்த ஊதியமும் அவர்களை முன்னேற விடவில்லை. அவர்கள் நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் அவர்களை ப்பணி அமர்த்தியவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
1960 ஆம் ஆண்டு இந்திய சீனா போரால் எங்கும் ஏற்பட்ட பஞ்சம் இவர்களைப் பெரிதும் வாட்டியது.
தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலம். சாணிப்பால், சாட்டையடி என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன .[1] கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் பி. சீனிவாசராவ்வும். சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள். உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.[1]
1968 டிசம்பர் 25. கிறித்துமசு நாள். நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.[2]
பெயர் வயது
பாப்பா (ராமய்யன் மனைவி) 25 ஆசைத்தம்பி 10 சந்திரா 12 வாசுகி 23 சுந்தரம் (பெண்) 45 சரோஜா 12 மருதம்பாள் 25 தங்கையன் 5 சின்னபிள்ளை (பெண்) 25 கருணாநிதி 12 வாசுகி 5 குருவம்மாள் 30 பூமயில் 16 கருப்பாயி 35 நாச்சியம்மாள் 16 தாமோதரன் 12 ஜெயம் 10 கனகம்பாள் 25 ராமச்சந்திரன் 7 சுப்பன் 70 குப்பம்மாள் 60 பாக்கியம் (பெண்) 35 ஜோதி 10 காளிமுத்து (பெண்) 35 குருசாமி 15 நடராஜன் 5 வீரம்மாள் 22 பட்டு 46 சண்முகம் 13 வேதவல்லி 13 முருகன் 40 ஆச்சியம்மாள் 30 நாகராஜன் 10 ஜெயம் 6 செல்வி 3 கருப்பாயி 50 சோலை 26 நடராஜன் 6 அஞ்சலை 45 ஆண்டாள் 12 சீனிவாசன் 40 காவேரி 50 சீனிவாசன் 38 முருகன் 45
106 பேர் கைதானார்கள். "இது சாதிய மோதல்" என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. "அதிக நிலங்களைச் சொத்துக்களாக வைத்திருப்பவர்கள் இப்படியொரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் குற்றவாளிகள் அல்ல…" என்று 1973 ஏப்ரல் 6 ஆம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள்.
|
பாஸ்கரன் மதுராந்தக சோழ தேவர்
25/12/1968
திராவிடத்தால் எரிந்தோம்.!
கம்யூனிசத்தால் கருகினோம்.!
எம் உறவு தேவேந்திரர்களுடன் வெண்மணி துக்கத்தை பகிர்ந்துகொள்கிறோம்.!
வெண்மணி போராளிகளுக்கு வீரவணக்கம்.!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழத்தில் அண்ணாதுரை தலைமையிலான அன்றைய திமுக ஆட்சியின்போது, தங்கள் தாயகத்தில் கூலி உயர்வு கேட்டு போராடியதால் எம்மின பறையர் மற்றும் பள்ளர் உறவுகள் 44 பேர் சாதிவெறிபிடித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு என்பவனால் உயிருடன் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்ட தினம் டிசம்பர்’25.
தற்போதைய நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழவெண்மணி கிராமம். 1960களில் தஞ்சையில் பண்ணையார்கள், நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் தலைவிரித்தாடிய காலம். பண்ணையார்களிடம்தான் அதிக நிலமும் பணமும் இருந்தது. பண்ணையார்களிடம் வேலை செய்து தங்கள் வாழ்கையை நகர்த்திச் சென்ற விவசாய கூலிகளை பண்ணையார்கள் தங்கள் அடிமைகளாகவே கருதினர். குறைந்த கூலிக்கு
அதிக வேலை வாங்கினார்கள். குறைந்த கூலி, அதுவும் பணமாக கிடையாது. ஒரு படி நெல்லும் கேப்பை கூழும்தான் சம்பளம்.
பண்ணையார்கள் பண்ணை அடிமைகளை இரக்கமில்லாமல் வேலை வாங்கினர். வயலில் நடவு நடும் பெண், ஒருமாதம் முன் பிறந்த தன் பச்சைக் குழந்தையை அங்குள்ள மரத்தில், சேலையை கட்டி கிடத்திவிட்டு வேலைசெய்வார். அந்த குழந்தை பசியில் அழுதால் கூட வேலையை முடிக்காமல் பால் கொடுக்கச் செல்லக் கூடாது. மீறினால் வேலை கிடையாது அன்று. சில நேரங்களில் பால் கொடுக்கும் தாயின் மார்பில் எட்டி உதைவிட்டுவிட்டு செல்வர். அப்படியான கொடுமை. எதிர்த்தால் கட்டி வைத்து அடி உதைதான். ஆபாச வார்த்தை அர்ச்சனைகளால் பெண்கள் கூனிக் குறுகிவிடுவர். எதிர்த்தால் பிழைப்பு கெட்டுவிடும். ஒரு பண்ணையாரிடம் முறைத்துக்கொண்டு மற்றொருவரிடம் செல்ல முடியாதபடி பண்ணையார்கள் தங்களுக்குள் நல்ல பிணைப்பை உருவாக்கி வைத்திருந்தனர். சாணிப்பால், சவுக்கடி இவையெல்லாம் சர்வசாதாரணமான தண்டனைகள் அங்கே. ஆயினும் எதிர்த்தார்கள்.!
குறைந்த கூலியுடன் பிழைப்பை நடத்த முடியாது என்பதால் கூலி உயர்வு கேட்டனர் பூர்வகுடி விவசாய கூலிகள், ஆனாலும் பயனில்லை.
இவர்களுக்காக விவசாய தொழிலாளர் சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணியம்மை மற்றும் சீனிவாசராவ். இதில் அப்பாவி மக்கள் இணைந்து தங்களுக்கு கூலி உயர்வு கேட்டனர். இவர்களுக்கு போட்டியாக நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற சங்கத்தை ஆரம்பிக்கின்றனர் நிலக்கிழார்கள்.
விவசாய கூலிகள் கூடுதலாக கேட்கும் அரை படி நெல்லை தருவதற்கு மனமில்லை. உழைப்புக்கு ஏற்ற கூலி கொடுக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஆனாலும் நேற்று வரை நமக்கு கீழ் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்த்தவர்கள், நமக்கு எதிரே அமர்ந்து நம்மிடமே பேச்சுவார்த்தை நடத்துவதா என்ற பெருங்கோபம் சம்பந்தப்பட்ட பண்ணையார்களிடம் கனன்று வந்தது. 'எங்களுக்கு எதிராக சங்கம் ஆரம்பிக்கிறீங்களா..?' என்று கீழவெண்மணியை சேர்ந்த முத்துகுமார், கணபதி இருவரை கட்டிவைத்து அடித்தனர். இதை எதிர்த்து பூர்வகுடிகள் மோதலில் ஈடுபட்டனர். இதனால் கீழவெண்மணியில் கலவரம் மூண்டது.
1968 டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க, கீழவெண்மணி மக்களுக்கோ அன்று இருண்ட நாளாக அமைந்தது.
'தனக்கு அடிமையாக இருந்தவர்கள் தன்னை எதிர்ப்பதா?' என்று ஆத்திரம் கொண்ட சாதிவெறிபிடித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடு, தனது அடியாட்களுடன் பெட்ரோல் கேன்கள், நாட்டுத் துப்பாக்கி சகிதம் வந்திறங்கினார். அவர்களுக்கு போலீசாரும் துணை நின்றனர் என்பது வேதனை. அவர்கள் முன்னிலையிலே அந்த கொடிய சம்பவத்தை அரங்கேற்றினர் சாதிவெறியர்கள். காட்டில் மிருகம் வேட்டையாடப்படுவது போல் கண்ணுக்கு கிடைப்பவர்கள் எல்லாம் சுடப்பட்டனர்.
இப்படி சுடப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் இருப்பார்கள். இதனைக்கண்டு பயந்து சிதறி ஓடி, வாய்க்கால் வரப்புகளில் ஒடி ஒளிந்துகொண்டனர் பூர்வகுடி விவசாய கூலிகள். சேரியின் அனைத்து குடிசைகளும் எரிக்கப்பட்டன. நிராயுதபாணியாக நின்ற அப்பாவி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ராமையா என்பவரின் சிறிய கூரைவீட்டில் ஓடி ஒளிந்தனர். சாதிவெறிபிடித்து அலைந்தவர்கள் அந்த வீட்டை வெளியே தாழிட்டு பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டனர்.
பூட்டிய வீட்டுக்குள் பெரும் அலறல் சத்தம், 'ஐயோ, அம்மா!' என்ற சத்தம் மட்டும் திரும்ப திரும்ப கேட்டிருக்கிறது. தான் பிழைக்காவிட்டாலும் தன் குழந்தையாவது பிழைக்கட்டும் என்று ஒரு பெண் தன் குழந்தையை அக்குடிசைக்கு வெளியே தூக்கி எறிகிறார். கொடூரர்கள் குழந்தை என்றும் பாராமல் வெட்டி வீழ்த்தி அத்தீயில் வீசி எரித்தனர். வெளிய வர முயற்சித்தவர்களை மறுபடியும் உள்ளே தள்ளினர்.
வெளியில் நின்று அழுத மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் தீயின் உள்ளே தள்ளினர் சாதிவெறியர்கள். தீயின் கோர நாக்குகள் சற்று நேரத்திலே 20 பெண்கள், 19 குழந்தைகள், 6 ஆண்கள் என 44 உயிர்களை தனக்குள் இழுத்து இரையாக்கிக்கொண்டது. ஒரு பெண் தனது மகளையும் சேர்த்து கெட்டியாக அணைத்துக் கொண்டு கருகியிருந்தார். இதில் 26 பேர் பறையர்கள் 18 பேர் பள்ளர்கள்.
இக்கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. சம்பவம் தொடர்பாக வழக்கு இரண்டாக பதியப்பட்டது. முதல் வழக்கில் பூர்வகுடிகள் 120 பேரின் மீதும் இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு சரியான தண்டனை கிடைத்ததா என்றால், இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுக்கும் அவனுடைய ஆதரவாளர்கள் 7 பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை.
மேற்முறையீட்டுக்காக வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பூர்வகுடி விவசாய கூலிகளுக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் அவனோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்கும் ஜாமீன் வழங்கியது. அப்பாவி பூர்வகுடி விவசாய கூலிகளுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
கொடுமை இது மட்டும்தானா...? இல்லை, ஆம் இறுதித் தீர்ப்பில் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு உயர் நீதிமன்றம் சொன்ன காரணம் பெரும் அதிர்ச்சிக்குரியது.
“இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருமே நிலக்கிழார்களாக இருப்பது வியப்பாக உள்ளது. அவர்கள் அனைவரும் பணக்காரர்கள். கௌரவமிக்க சமூகத்தில் உள்ள அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம்” -இதுதான் தீர்ப்பு.
ஒருவர் விடுதலையாவதற்கான தகுதி அவர் பணக்காரர். இந்த ஒரே தகுதியைக் காரணமாக வைத்துக்கொண்டு அப்பாவி பூர்வகுடி விவசாய கூலிகளையும் அவர்களின் குழந்தைகளை எரித்துக் கொன்றவர்களுக்கும் தீர்ப்பு “விடுதலை” என சாதிய மேதாவிகளை கொண்ட நீ(சா)திமன்றம் உத்தரவிட்டது. இதுதான் அன்றைக்கும் இன்றைக்கும் பூர்வகுடிகளின் நிலை. இப்படியான வகையில் 1992 ல் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குறிஞ்சாக்குளம் கிராமத்தில் நாயுடுகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நான்கு பறையர்களின் படுகொலையிலும் குற்றவாளிகளை விடுதலை செய்து நீ(சா)திமன்றம் தீர்ப்பு எனும் பெயரில் அநீதியை வழங்கியது.
வெண்மணி சாதிவெறியாட்டத்தில் எரித்துக் கொல்லப்பட்டவர்கள் நினைவாக கீழவெண்மணியில் நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இங்கு எரித்தவனோடு கைகோர்த்துக்கொண்டு வருடாவருடம் வீரவணக்கம் செலுத்துவது தலித் இயக்கங்களின் சம்பிரதாயமாகிவிட்டது.
எம் மக்களைவைத்து இப்பிரச்சினையை தூண்டி அரசியல் ஆதாயம் கண்ட கட்சிகள் கொழுத்ததுதான் மிச்சம்.! ஆனால் எம் மக்களின் நிலையில் இன்றுவரை எந்த மாற்றமுமில்லை, மாற்றத்திற்கு அக்கட்சிகளின் ஆக்கபூர்வ பங்களிப்பு எதுவும் இல்லை.!
என்று ஒழியுமோ எம் மக்களின் இந்த அவலம்.!
இவண்,
மதுராந்தக சோழ தேவர், தலைவர், வீர சோழ பறையர் நலச்சங்கம். சோழ மண்டலம். |
| Suresh Kumar.31/12/2017 வரலாறு டிசம்பர் 31 இரவு 1818அன்று நடந்த மறைக்கபட்ட உன்மை வராலறு சம்பவம். டிசம்பர் 31 இரவு 1818 மரட்டிய மானிலம் புனே நகருக்கும் அகமத்நகர் இடைபட்ட சிறு நகரம் பீமா நதிகரையிள் அமைந்துள்ள கோரேகவ் நடத்த சம்பவம். பீமா நதி கரையில் ஒருபுரம் 30000 அயிரம் பிராமன பேஷ்வா படையும் மறுபுரம் 10000 ஆங்கில படையும் போருக்கு தயார் நிலையில் இருந்த போது ஆங்கில படைக்கு ஆதரவாக மன்னின் மைந்தகளன மகர் படையை 500 விரார்களும் தயரக இருந்தனர். அந்த சமயத்தில் ஆங்கில படைக்கு தூது வருகிறது நமக்கு எதிராக முன்று மடங்கு பெரும்படை உள்ளது அதலால் நம்மல் போரிட்டு வேள்வது சாத்தியம் அற்றது. நாம் பின்வாங்குதான் நல்லது என்று. அந்த நிலையில் ஆங்கில படையும் பின்வாங்கியது. ஆதலால் என்ன செய்வது என்று அறியமால் இருந்த மகர்படைக்கு பின் வாங்கினலும் மரனம் போறீட்டலும் மரனம்தான் என்று ஏன் போரிட்டு மரணிக்க கூடாது என்று. கோழையாக சாவதைவிட விரானக சாவதே மேல் என்று .இந்த செய்தியை கேட்ட பேஷ்வா படையில் இருந்த மன்னின் மைந்தரன சித்தநாத் என்பவர் மகர் படைக்கு தலமைதாங்க வருகிறார். அவருடைய பெயரை கேட்டவுடன் பேஷ்வா படையில் உள்ள 2000 விரார்கள் ஓடிவிடுகிறார்கள் அவர் அந்த அலவுக்கு திறமைசாலி. இரவு முலுவதம் போர் நடக்கிறது மருநாள் காலை ஜனவரி 1 1818 வருடம் ஆங்கில படைக்கு தூது செல்கிறது ஆங்கில படையின் தலமை விரர் வந்து பார்கிறார் பீமா நதி ரத்த ஆறாக ஒடுகிறது. என்ன என்று பார்த்தல் மகர் படையினர் 500 பேர் சேர்ந்து 28000 பேரை கொன்று குவித்துள்ளனர். பேஷ்வா படையினரை . இந்த ஆதாரம் வேன்டும் என்றால் கூகுளில் சென்று பீமாகோரேகவ் என்ற வரலாறை படித்தால் புரியும். தோழர்களே பாபாசகேப் அம்பேத்கர் உயிருடன் இருந்தவரை ஜனவரி 1 அன்று நாம் முன்ணோறகளன மகர்படை இரந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த பொவார். எனக்கு அந்த வாய்பும் வரலாறும் கடந்த வருடம் கிட்டியது. அந்த வரலாறை மக்களிடம் கொன்டு செல்ல ஒரு அறிய வாய்புதான் இந்த வராலறு. அன்று மகர்கள் பேஷ்வகளின் கதை முடிக்கமல் இருந்தால் இன்றும் அடிமை வால்க்கையில் இருந்திருப்பமோ என்று ஒரு அச்சம். அதன் தொடர்சியகதான் ஆங்கிலீயோர் கல்வி நிலையங்கள் வேலைவாய்புகள் என்று ஏராலம் கிட்டியது. அந்த கல்வி கூடங்களில்தான் நாட்டுக்கு எல்லோரும் கல்விகற்க்க வேன்டும் என்று பொறடிய தம்பதிகளான ஜோதிபா பூலே , சவுத்ரிபாய் பூலே கற்றார்கள். நமக்ககா உயிர் தியகம் செய்த மகர் விரார்களுக்கு நன்றி சொல்வோம் |
| ம.நடராசனின் மறுபக்கம்... -- By Soma Sundara Prabhu M
சசிகலாவின் கணவன் ம.நடராசனின் வாழ்க்கை வரலாறு நமக்கு தேவையற்றது எனும் போதிலும், அரசியலில் எந்தெந்த வகையில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிந்து கொள்வது அவசியம். ஏற்றிவிட்ட ஏணிகளான கலைஞர், ஜெயலலிதா, சந்திரலேகா மற்றும் பொதுமக்கள் என்று அனைவருக்கும் துரோகத்தையும், வஞ்சத்தையும் பரிசாக தந்த உத்தமன் இந்த நடராசன் என்பதை விளக்கவே இந்த தொகுப்பு.
1967இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவராய் இருந்த காலத்தில் பங்கெடுத்திருக்கிறார் தஞ்சையில் (மாணவர் தலைவராய் தலைமை தாங்கியதாக கூட கதைகள் உண்டு), இதற்கு பிற்பாடு சில ஆண்டுகளுக்கு பின் ஆர்.டி.ஓ. வேலைக்கு தேர்வெழுதி தோல்வியுறுகிறார், (பின்னாளில், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, "மகளிர் மேம்பாட்டில் இதழ்களின் பங்கு" என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெறுகிறார்
பின்னர் நடராசனுக்கும் சசிகலாவுக்கும் கலைஞரே தலைமை தாங்கி திருமணம் முடித்து வைத்தார். கடலூர் மாவட்டத்தில் அப்பொழுது ஆட்சித்தலைவர் சந்திரலேகா அவர்கள், எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார் 77ல் வந்ததும் முதல் கையெழுத்து நடராசன் உள்ளிட்ட 11பேரின் பி.ஆர்.ஓ.பதவி நீக்க கோப்பில் தான். இதனால் சந்திரலேகா நடராசன் குடும்பத்தின் மேல் அனுதாபப்படுகிறார்.
பிழைப்புக்கு வழி தெரியாமல், வீடியோ கேசட்டுகளை சென்னையின் முக்கிய பணக்கார தெருக்களில் வீடு வீடாக மாலையில் கொடுத்து காலையில் வாங்கி பிழைப்பு நடத்த துவங்குகிறார் சசிகலா. நடராசனோ நீக்கப்பட்ட மீதமுள்ள 10பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு, ஸ்டேட் ட்ரிப்யூனலில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் ஆஜராகும் வக்கீலின் வீட்டு அவுட் ஹவுஸில் தங்கி, அவருக்கு குமாஸ்தாவாக காலம் கழிக்கிறார். இதுவே இந்த தம்பதியினர் சென்னை வந்ததற்கான காரணம்.
1981ல் சந்திரலேகாவை சந்தித்து உதவி கேட்கிறார்கள், அரசு விழாக்களின் வீடியோ உரிமையை பெற்றுத் தரக் கோரி. தனக்குக் கீழ் பணி செய்து வேலையிழந்தவர் என்ற அனுதாபம் இருக்கவே, எம்.ஜி.ஆரிடம் இன்னாரின் மனைவி என்று சொல்லாமல் விசயத்தை சொல்கிறார். எம்.ஜி.ஆரோ, "இது கொ.ப.செ. ஜெ. முடிவெடுக்க வேண்டிய ஒன்று" என்று கூறி ஜெ.விடம் அனுப்பி வைக்கிறார். இப்படியாக ஜெ.யிடம் செல்ல, ஜெ. வீட்டுக்கும் தான் வீடியோ கேசட்டை செக்யூரிட்டியிடம் கொடுக்கும் விவரத்தை தெரிவிக்கிறார் சசிகலா. பரிதாபப்பட்டு வீட்டுக்குள்ளேயே வந்து கொடுக்க அனுமதித்து, தினமும் பேச்சுத் துணையாக சசிகலாவை வைத்து திரும்ப அனுப்பியவர், வீட்டிலேயே சேர்த்தும் கொண்டார்.
இவர்களின் ஓதுதல் கேட்டே எம்.ஜி.ஆருக்கு எதிராக சில வேலைகளை செய்தார், கட்சியிலிருந்து ஒதுக்கியும் வைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா கொடுத்த குடைச்சலாலும், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமானதாலும், திமுகவோடு கட்சியை இணைத்து விடும் முயற்சியை எம்.ஜி.ஆர் எடுத்ததாகவும், அதை ஆர்.எம்.வீ., சோலை உள்ளிட்டவர்கள் தடுத்ததாகவும், அவர்களே நக்கீரன் தொடரில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழல் வருமென்று தெரிந்திருந்ததால் தான், அன்றே அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரே கலைத்துவிடவும் முடிவெடுத்தார். தடுத்தவர்கள் பின்னாட்களில் வருந்த வேண்டி வந்தது...
எம்.ஜி.ஆரின் இறப்புக்கு பின், ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி மீண்டும் இழந்த செல்வாக்கை பெறலாம் என்று ராஜீவ் காந்திக்கு இங்குள்ள சிலர் தூபம் போட, ஜானகி தலைமையிலான ஆட்சி கலைக்கப்படுகிறது (அன்று ஆட்சிக் கலைப்பு சாதாரணமான நிகழ்வு, கலைஞர் ஆட்சி இரு முறையும், எம்.ஜி.ஆர். ஜானகி ஆட்சி தலாஒரு முறையும் கலைக்கப்பட்டிருக்கிறது).
1989 தேர்தலில் திமுக கூட்டணி 165 தொகுதிகளில் வென்றது, ஜா.அணியுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரசின் திட்டம் பலிக்கவில்லை வெறும் 35தொகுதிகளையே வென்றது. இந்த வேளையில் ஜானகி அரசியலை விட்டு விலகி, ஜெ.வுக்கு கட்சிக்குள் ஓரளவு செல்வாக்கு பெருகி, இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது. வரவு செலவு கணக்குகளை பார்த்த ஜெயலலிதா உறைந்து போய், கோவத்தின் உச்சிக்கே சென்றார். பாதிக்கும் மேற்பட்ட பணம் கையாடப்பட்டிருந்தது நடராசனால். இதனால் கோவமுற்று, அரசியலை விட்டு விலகிப் போகப் போவதாக தெரிவித்து நடராசனையும் கார்டனை விட்டு விரட்டியடித்தார், எனினும் சசிகலா தொடர்ந்து அவருடனேயே இருந்தார்.
மிக மிக முக்கியமான காலகட்டம் இது தான், இந்த காலகட்டத்தில் தான் இலங்கை சென்ற அமைதிப்படை சென்னை வந்திறங்கி, டெல்லி சென்றது. மரபுப்படி, கலைஞர் அமைதிப்படையை வரவேற்க வேண்டும், இலங்கையில் அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரவேற்க செல்லவில்லை கலைஞர். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய நடராசன், இதைச் சொல்லியே ஜெ. மனதை கரைத்தார்.
இதற்காக லாபி செய்ய டெல்லி புறப்பட்ட நடராசனுக்கு, அங்கே ராஜிவ் கொலைக்கான அசைன்மெண்ட் குறித்து தெரியவருகின்றது.
இதற்கான பிரதி உபகாரமாக தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையுடன் துவங்கியது ப்ராஜெக்ட். ஆட்சி கலைப்பு, விடுதலை புலிகளுக்கு(திமுகவின் நிதியை வாங்க மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது) இரகசியங்களை தாரை வார்க்கின்றது திமுக தலைமையிலான அரசு என்ற சப்பையான காரணத்தை வைத்து நடத்தப்பட்டது. மீதி திட்டங்களை எல்லாம் வகுத்து, விடுதலைப் புலிகளை அணுகி கொலைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, ராஜீவையும் தமிழகம் வரவைத்தாயிற்று. திட்டம் குறித்து நாட்டில் பலருக்கும் இரகசியம் கசிந்திருந்த பொழுதும், யார் எதற்காக செய்யப் போகின்றார்கள் என்று அறியாததால், வதந்தி என்றே எண்ணியிருந்தனர்.
ராஜீவின் வருகையை அன்றைய தமிழக ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங் தடுத்துப் பார்த்தார், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி. பின்னாளில், பாதுகாப்பு சரியாக இருந்ததாகவும், அதனை காங்கிரசாரே உடைத்தாகவும் தெரிவித்தார் அன்றைய ஆளுனர். மேடையில், முக்கிய புள்ளிகள் எவருமில்லை, எல்லோருக்குமே ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக தெரிந்திருந்தது, என்ன, எப்படி என்று மட்டும் தெரிந்திருக்கவில்லை. இதன் தீவிரத்தையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
அந்த கருப்பு தினமும் வந்தது, கொலைக்கு முன்னதாகவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட நடராசன், "இன்று இரவு திமுகவினர் அனைவருடைய இல்லங்களையும் (குறிப்பாக திமுக வேட்பாளர்களின் இல்லங்களை) இரவோடு இரவாக முற்றுகையிட வேண்டும்" என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இல்லையெனில், விடிவதற்குள்ளாகவே ராஜீவை கொலை செய்த பழி திமுக மீது எப்படி விழுந்திருக்கும்????
நாடெங்கிலும் ராஜீவின் உடல் சிதறிய மற்றும் ஜெ.வின் தலைவிரி கோலமும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன, செய்யாத குற்றத்திற்காக தண்டனையும் பெற்றது திமுக. மக்கள் யோசிக்க தவறி விட்டார்கள், தேர்தல் வேளையில் எளிதில் ஆட்சியமைக்க இருக்கும் ஒரு கட்சி எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் என்று. நடராசன் போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி அதிமுக வென்றது, ஹிட்லராட்சி துவங்கியது. நாமெல்லாம் எண்ணியிருக்கிறோம், நம்புகிறோம், ஜெ. தான் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டிருந்தார் என்றும், சிலவற்றுக்கு காரணம் சசிகலா என்றும், அது தான் இல்லை. எல்லாமே கொலையரசன் நடராசனின் சதிச்செயல்.
1991 அதிமுக ஆட்சி அமைந்து ஆடிய ஆட்டம் மக்கள் அனைவருக்கும் தெரியும், எனினும், எப்படி எப்படியெல்லாம் அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்தால் தான் புரியும், நினைவுக்கு வரும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சொந்த பலத்தில் வென்றதாகவும், ராஜீவ் கொலை செய்யப்பட்ட அனுதாபத்தால் அல்ல என்றார் ஜெயலலிதா. இது ஜெ.வின் குரல் அல்ல, நடராசனின் குரலை ஜெ. ஒலித்தார். பிரதமர் நரசிம்மராவ் தான் கொள்ளையர்களை அனுப்பி தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கிறார் என்றார்.
கொலைகொலையா முந்திரிக்கா.... அதிமுக அரசு குறித்து விமர்சித்த தராசு பத்திரிகை ஊழியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் ப.சிதம்பரத்தின் வாகனத்தை 400பேர் தாக்கினர் திருச்சியை சேர்ந்த இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தலைமையில். எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஒரு பட்டியல் தயார் செய்து கொடுத்தார் நடராசன், அதன்படி ஒட்டுக்கேட்கப் பட்டது. இவ்விரு நிகழ்வையும் தோலுரித்து எழுதிய நக்கீரன் அலுவலகத்தில் ரைடு நடத்தி மிரட்டியது நடராசன் உத்தரவின் பேரில். வாட்டர் கேட் ஊழல் என்று தலையங்கமிட்டு எழுதிய நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் ஊழியர்கள் மூவரை கைது செய்தது ~ஜெ~நடராசன் போலீஸ். இது போல பல வழிகளில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டனர்.
இப்படி நடராசனால் செய்யப்பட்ட ஹிட்லர் ரூலிங், ஜெ.வின் ஸ்டைலாகவே மாறிப் போனது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணனை வீடு புகுந்து தாக்கியது, திருத்துறைப்பூண்டி இ.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பழனிச்சாமியை தாக்கியது, அன்றைய பா.ம.க. எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரனை தாமரைக்கனியை விட்டு தாக்கியது, என்று பட்டியல் நீள்கிறது.
மன்னார்குடி மாஃபியா லிஸ்ட்--------- 1)சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், மனைவி சந்தானலட்சுமி, பிள்ளைகள் அனுராதா(தினகரனின் மனைவி), டாக்டர் வெங்கடேஷ். 2) சகோதரி வனிதாமணி, கணவர் விவேகானந்தன், பிள்ளைகள் தினகரன், சுதாகரன்(ஜெ.வின் வளர்ப்புப் பிள்ளை), பாஸ்கரன். 3)அண்ணன் வினோதகன், மகன் மகாதேவன். 4)அண்ணன் ஜெயராமன், மனைவி இளவரசி, மகன் விவேக். 5)சசிகலா, கணவன் நடராசன், நடராசனின் தம்பி ராமச்சந்திரன். 6)தம்பி திவாகரன். ஆத்தாடி, மேம்போக்கா சொன்னதே எத்தா பெருசு!!!!!!
இந்த கும்பல் வைத்தது தான் சட்டம், தாக்குதல் பட்டியலை தொடர்வோம். ஜெ.அரசின் நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மருமகன் மீது கஞ்சா வழக்கு. திமுகவினர் மீது தடா சட்டம், டி.என். சேஷன் மீது விமான நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தினர் ரவுடிகள்.
நன்றிகெட்ட தனத்தின் உச்சமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்பிக் நிறுவனத்தின் 26% பங்குகளை குறைந்த விலைக்கு, அதன் நிறுவனர்களான ஏ.சி.முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் இருவருக்கும் கொடுப்பதை தட்டிக் கேட்ட, டிட்கோ தலைவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு (அழகுச் சண்டை வேறு காரணமாம்) இந்த முறைகேட்டால், அன்றே 40கோடி இழப்பு, அரசுக்கு. ஆசிட் வீசியது ரவுடி சுடலை என்கின்ற சுருளா, ஏவியது நத்தம் விஸ்வநாதன், நத்தத்தை ஏவியது திண்டுக்கல் சீனிவாசன், சீனிவாசனை ஏவியது மதுசூதனன், மதுசூதனனை ஏவியது சாட்சாத் நடராசனே தான். பின்னாளில் இந்த சுருளா, தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள, நீதிபதையையே தாக்கி, சிறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்கிறார்.
ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கை(காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்) கைக்குள் போட்டுக் கொண்டு, அவர் தேவைகளை நிறைவு செய்ய, தேவாரத்தின் கீழ் பணிபுரிந்த பெண் காவலர் லால் என்பவரை நியமித்ருந்தனர். அதைக் காட்டி மிரட்டி வைத்திருந்தனர் 30/05/1993 வரை. 31/05/1993 அன்று சென்னாரெட்டி ஆளுநர் பொறுப்பை ஏற்றார், இவர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தார். ஊழல் வழக்கு தொடுக்கும் சு.சாமியின் மனுவுக்கு அனுமதி கொடுத்தார் சென்னாரெட்டி. சட்டசபையிலேயே ஆளுநர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சொல்ல வைத்தனர்.
டான்சி வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள நீதிபதியிடம் திமுக கேட்க, அனுமதி வழங்கி விட்டார் நீதிபதி. இதற்காக இம்ப்ளீட் பெட்டிசன் தயார் செய்கின்றனர் அன்றைய மாநிலங்களவை உறுப்பினர் வக்கீல் சண்முகசுந்தரமும், இன்றைய மாநிலங்களவை உறுப்பினர் அய்யா ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் தயார் செய்து முடித்துவிட்டு, பாரதி அய்யா வீடு திரும்பி விடுகிறார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசைத்தம்பி என்கின்ற ரவடி தலைமையில் வந்த ரவுடி கும்பல் வக்கீல் சண்முகசுந்தரம் அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்புகிறது. பின்னர் அதிமுக ஆட்சியிலேயே, அந்த ரவுடி ஆசைத்தம்பி என்கவுண்டர் செய்யப்பட்டார்(விசயம் வெளியே தெரியக் கூடாதுல).
2012ம் ஆண்டு துவக்கத்தில் தமிழர் திருநாள் பண்டிகை கொண்டாடிய நடராசனின் பேச்சை இன்றைய அரசியல் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால், அதிமுகவினருக்கு கூட இவர் மேல் உள்ள சந்தேகம் வலுக்கும். அந்த பேச்சு: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். நீங்கள், “முடிவெடு" என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது(என்ன ஒரு பொதுநலம்). என் மனைவி மீது வழக்கு உள்ளது;(இது தான் உங்கள் பொதுநலமா???) அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் அவசரப்பட என்னால் முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!" இவ்வாறு நடராசன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார் (இதுவரை, இந்த நான்கரை ஆண்டுகளில், அப்படி எதுவும் நமக்கு தெரிந்து நடக்கவேயில்லையே). தஞ்சை அருகே, விளார்(நடராசனின் சொந்த ஊர்) ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, தனது கைக்கடிகாரம், பழைய கார்கள் உள்ளிட்ட உடைமைகளை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கினார். (ஏலம் விட்டதும் எடுத்ததும் நடராசனின் ஆட்களே....). முற்றம் தொடர்பான சிற்ப வேலைகள் செய்ய பணித்த திரைப்பட நடிகர் சைனி ஹீசைனியையும் கொன்று விடுவதாக மிரட்டினார், காவல்துறையில் புகார் கொடுத்து வைத்ததால் தப்பித்திருக்கிறார்.
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய பொழுது, குடும்ப மாநாடு நடத்தி, ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற முயற்சித்த துரோகி, தீயசக்தி தான் இந்த நடராசன்.
இன்றும் தஞ்சை உள்ளிட்ட நகரங்களில், "அதிமுக எனும் இராணுவ கட்டமைப்பு கொண்ட கட்சியை வழிநடத்த, தேவை இன்னொரு அம்மா, அது தான் எங்கள் சின்னம்மா" எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது போஸ்டர்களில். இதில் காசவளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது 18கிராமங்களை உள்ளடக்கியது, இதில் தான் நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமமும் வருகின்றது. இப்போ சொல்லுங்க இது யாருடைய வேலை????
அன்று முதல் இன்று வரை பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதித் துறையினர்(ஆச்சார்யா உட்பட), பொதுமக்கள் என்று அனைவரும், சொந்த நாட்டில் அடிமைகளாக கருத்து சுதந்திரம் இல்லாமல் வாழக் காரணம், இந்த நடராசன் வகுத்துத் தந்த பாதை தான். வேலை கொடுத்து திருமணம் செய்து வைத்த கலைஞருக்கும், இரக்கப்பட்டு ஜெ.விடம் அறிமுகப் படுத்திய சந்திரலேகாவிற்கும், ஆதரவளித்த ஜெ.விற்கும், இந்த பகட்டு வாழ்க்கை கிடைக்க காரணமான பொதுமக்களுக்கும், நடரசன் துரோகம் ஒன்றையே பரிசாக தந்திருக்கிறார்.
இந்த துரோகங்களுக்கு கிடைத்த தண்டனைகளாக, நடராசன் சிறைக் கம்பிகளை எண்ணியிருந்தாலும், இன்றளவும் ஈழ வியாபாரிகள், நெடுமாறன், வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்களை, அதிமுக சார்பு நிலைப்பாடு எடுக்க வைத்து, ஓரணியில் நிறுத்தியிருக்கிறார். இது மாபெரும் நாச வேலைக்கான, இனவாத அரசியலுக்கான அறிகுறி.
இப்படிப்பட்ட தீய சக்தி நடராசன் தான் கலைஞரை தீயசக்தி என்றும், ஜெயலலிதாவை சேடிஸ்ட் என்றும், மக்களை முட்டாள்கள் என்றும் கூறி வருகிறார்.
இப்போ சொல்லுங்க, இந்த நடராசன்(சசிகலா) கையில் அதிகாரம் செல்லலாமா???, இனவாத, மதவாத அரசியல் செய்ய நினைக்கும் தீயசக்திகள் நடராசனுக்கும், மோடிக்கும் தமிழகத்தில் எந்த அதிகாரமும் கிடைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
|
No comments:
Post a Comment